Friday, February 10, 2017

மேக்கப்... எட்டு வகை!

மேக்கப்பில் 8 வகை இருக்கு. முகம், சருமம், நிறம், தேவை, விருப்பம், செல்லும் இடம், ஆடை இவற்றின் அடிப்படையில உங்களுக்கான மேக்கப்பை தேர்ந்தெடுக்கலாம்!’’ 
சிம்பிள் மேக்கப்: மேக்கப் போட்ட மாதிரியே தெரியாது. ஆனா, மெருகு கூடியிருக்கும். சின்னச் சின்ன விழாக்களுக்கு இதைப் போட்டுக்கலாம்.
க்ளாஸி மேக்கப்: ரிசப்ஷன், பார்ட்டிகளுக்கு ஏற்ற மேக்கப். உங்களை கொஞ்சம் அட்ராக்டிவ்வா காட்டும்.
மேட் மேக்கப்: புருவம், கண்கள், உதடுனு உங்க முகத்தின் அழகான பார்ட்டை ஹைலைட் செய்து காட்டும்.
க்ளோ மேக்கப்: முழுக்க மேக்கப் மூலமாக நிரப்பாமல், ஆங்காங்கே ஹைலைட் செய்யும் மேக்கப். குறிப்பாக, சிரிக்கும்போது உங்கள் கன்னங்கள் ‘ரோஸி’யாகும் கலை.
கோல்டன் மேக்கப்: முகம் முழு வதும் ஜொலிக்க வைக்கும் மேக்கப். திருமணப் பெண்களுக்கு ஏற்றது இது.
ஏர் ஃபிரெஷ்: மிகவும் நுணுக்கமான இந்த மேக்கப்பால் முகத்தில் உள்ள மருக்கள், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள், சருமத் திட்டுகள் எல்லாம் மறைந்து, முகம் முழுக்க ஒரே டோனில் காட்டப்படும்.
கான்டரிங் மேக்கப்: இதை கரெக்ட் டிங் மேக்கப் என்பார்கள். அதாவது, சப்பை மூக்கை எடுப்பாகக் காட்டவும், இரட்டை நாடி உள்ளவர்களுக்கு அதை ஒன்றாகக் காட்டவும் என உங்கள் முகத்தில் நீங்கள் மைனஸாக நினைக்கும் விஷயங்களை ப்ளஸ் ஆக்கும் மேஜிக்.
போர்ட்ஃபோலியோ மற்றும் ஹெச்டி மேக்கப்: இது போட்டோ ஷூட்டுக்கான மேக்கப்

No comments:

Post a Comment