9 ரோல் பிரைடல் கொண்டை (9 Roll Bridal Kondai) :
தலைமுடியை நன்றாக சிக்கு இல்லாமல் சீவிக் கொள்ளவும். முடி அனைத்தையும் தலையின் நடுப்பகுதியிலிருந்து போனி டெய்ல் போடவும். பிறகு, போனி டெய்லை சிறுசிறு பாகங்களாக பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு பாகத்தையும் ரோல் செய்து, 'பின்' செய்ய வேண்டும். 'பின்' செய்யப்பட்ட ஒவ்வொரு பகுதியையும், கொண்டை வடிவில் 'பின்' செய்து, பீட்ஸ் (Beads) மற்றும் பூக்கள் கொண்டு அலங்கரிக்கவும்.
ஹாட் ரோலர்ஸ் கொண்டை (Hot Rollers kondai):
தலைமுடியை நன்றாக சிக்கு இல்லாமல் சீவிக் கொள்ளவும். முன்பகுதியில் உள்ள தலைமுடியை சிறுசிறு செக்ஷன்களாக பிரித்து, 'ப்ளோ ட்ரை' செய்து, வலதுபுறமாக 'பின்' செய்யவும். 'ஹாட் ரோலர்ஸ்' (Hot
Rollers) கொண்டு நன்றாக சூடுபடுத்த வேண்டும். இதேபோல பின்புறமாக உள்ள அனைத்து தலைமுடியையும் நன்றாக சீவிக் கொண்டு, சிறுசிறு பாகங்களாக பிரித்து, 'ஹாட் ரோலர்ஸ்' உபயோகித்து ரோல் செய்யவும். 45 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு, ஒவ்வொரு ரோலையும் பிரித்து, கர்ல் (Curl) வடிவில் உள்ள ஒவ்வொரு ரோலையும் கொண்டை வடிவில் 'பின்' செய்யவும். நிறைவாக ஃபீட்ஸ் மற்றும் பூக்கள் கொண்டு அலங்கரிக்கவும்.
பிரெஞ்சு ரோல் (French Roll):
மொத்த தலைமுடியையும் சிக்கு இல்லாமல் சீவிக் கொள்ளவும். 'இயர் டு இயர் செக்ஷன்'
(Ear to Ear Section) என்கிற வகையில், ஒரு காதில் இருந்து மற்றொரு காது வரையிலான தலையின் முன்பகுதி முடி ஒரு பாகம், பின்புறம் உள்ள மொத்த முடியும் ஒரு பாகம் என இரண்டு பாகங்களாக பிரிக்கவும்.
(Ear to Ear Section) என்கிற வகையில், ஒரு காதில் இருந்து மற்றொரு காது வரையிலான தலையின் முன்பகுதி முடி ஒரு பாகம், பின்புறம் உள்ள மொத்த முடியும் ஒரு பாகம் என இரண்டு பாகங்களாக பிரிக்கவும்.
முன்புறம் பிரித்து வைத்திருக்கும் முடியை இரண்டு பாகங்களாக பிரிக்கவும். பின்புறம் உள்ள அனைத்து முடியையும் நன்றாக சீவி, இடதுபுறமாக கொண்டு சென்று, 'ஹேர் பின்' உபயோகித்து 'கிளிப்' செய்துகொள்ள வேண்டும் (ஒன்றன்மேல் ஒன்றாக). இடது கையை முடியின் நடுவில் வைத்து, நன்றாக ரோல் செய்து, 'ஹேர் பின்' மற்றும் 'யு பின்' (U pin)
உபயோகப்படுத்தி, முடி அனைத்தையும் பின் செய்யவும்.
முடியின் அடர்த்தி குறைவாக உள்ளவர்களுக்கு, முடியை, 'பேக் கோம்ப்’ (Back comb) செய்து, ரோல் செய்தால் அடர்த்தி நிறைவாக இருப்பது போன்ற தோற்றத்தைத் தரும்.
முன்பகுதியில் இரண்டாக பிரித்து வைத்த முடியை ஒன்றாகச் சேர்த்து, நன்றாக சீவிக் கொள்ளவும். அதை சிறிதளவு 'பேக் கோம்ப்' செய்து, மேற்புறமாக உள்ள முடியை சிக்கு இல்லாமல் செய்து, பஃப் வடிவில் வைத்து, 'பின்' செய்ய வேண்டும். நிறைவாக பூக்கள் கொண்டு அலங்கரித்தால்... 'ஒரு தேவதை வந்துவிட்டாள்...' என்று நீங்களே பாட ஆரம்பித்துவிடுவீர்கள்!
ஜடை அட்டாச்மென்ட் ஹேர் ஸ்டைல் (Jadai attachement hair style):
தலைமுடியை நன்றாக சிக்கு இல்லாமல் சீவிக்கொள்ளவும். 'இயர் டு இயர் செக்ஷன்' (Ear to
Ear Section) என்கிற வகையில், ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரையிலான தலையின் முன்பகுதி முடியை இரண்டு பாகங்களாக பிரிக்கவும். ஒரு பாகத்தை இடதுபுறமாக பஃப் செய்து, ஹேர்பின் உபயோகித்து பின் செய்யவும். மற்றொரு பாகத்தை வலது புறமாக பஃப் (பின்புறம்) செய்து, ஹேர்பின் உபயோகித்து பின் செய்யவும். பின்புறமாக தலையில் உள்ள அனைத்து முடியையும் சேர்த்து ஜடை பின்ன வேண்டும். அதன் மீது அட்டாச் ஜடையை சேர்த்துத் தைக்கவும். பின்னர் அரை கொண்டை வடிவில் இருக்கும் ரிங் எடுத்து, தலையில் பின் செய்து, பூக்கள் கொண்டு அதனை சுற்றி அலங்கரிக்கவும். ஜடையில் அழகான கெம்ப் ஸ்டோன் (Kemp
stone) வைத்து 'ஜடை பில்'லை கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்பு: ஒவ்வொரு ஹேர்ஸ்டைலையுமே, உங்களின் முக அமைப்புக்கு ஏற்றவாறு அமைப்பது மிகமுக்கியம். அதேபோல முடியின் தன்மையைப் பொறுத்தும் ஸ்டைல் மாறுபடும்.
ஃபைவ் ரோல் கிறிஸ்டியன் (Five Roll Christian):
தலைமுடியை சிக்கு இல்லாமல் நன்றாக சீவிக்கொள்ளவும். முன்புற முடியை சிறிதளவு பிரித்துக் கொண்டு, 'சைட்வேஸ்'-ல்
(Sideways) நன்றாக 'ஃப்ளோ ட்ரை' செய்து, 'பின்' செய்யவும். பின்புற முடி அனைத்தையும், தலையின் நடுப்பகுதியில் 'போனி டெய்ல்' போடவும். பின்னர், 'போனி டெய்லை' மூன்று பாகங்களாக பிரித்து, முக்கோண வடிவில் ரோல் செய்து, 'பின்' செய்யவும். நிறைவாக, மணிகள் அல்லது பூக்கள் கொண்டு அலங்கரிக்கவும்.
ஃபிரீ கர்லி ஹேர் ஸ்டைல் (Free Curly Hairstyle):
தலைமுடியை நன்றாக சிக்கு இல்லாமல் சீவிக் கொள்ளவும். 'இயர் டு இயர் செக்ஷன்' (Ear to Ear Section) என்கிற வகையில், ஒரு காதிலிருந்து மற்றொரு காது வரையிலான தலையின் முன்பகுதி முடியை இரண்டு பாகங்களாக பிரிக்கவும். ஒரு பாகத்தை இடதுபுறமாக பஃப் (Puff) செய்து ஹேர்பின் உபயோகித்து, 'பின்' செய்யவும். மற்றொரு பாகத்தை வலதுபுறமாக பஃப் செய்து ஹேர் பின் உபயோகித்து 'பின்' செய்யவும்.
தலையின் பின்புறம் உள்ள அனைத்து முடியையும் சேர்த்து 'யு பின்' பயன்படுத்தி கொண்டை போடவும். பிறகு, அதன் மீது, செயற்கை முடியை
(Atrifical Curly Hair Attachment) இணைத்து 'ஹேர்பின்' பயன்படுத்தி, 'பின்' செய்யவும். நிறைவாக, பீட்ஸ் மற்றும் பூக்கள் கொண்டு அலங்கரிக்கவும்.
த்ரீ ஸ்டெப்ஸ் ரோல் ஹேர் ஸ்டைல் (Three Steps Roll Hair style):
மொத்த தலைமுடியையும் சிக்கு இல்லாமல் சீவிக் கொள்ளவும். 'இயர் டு இயர் செக்ஷன்'
(Ear to Ear Section) என்கிற வகையில், ஒரு காதில் இருந்து மற்றொரு காது வரையிலான தலையின் முன்பகுதி முடியை இரு பாகங்களாக பிரிக்கவும். பின்புற முடி மொத்தத்தையும் அரைவட்ட வடிவில் மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்ளவும். ஒவ்வொரு பாகத்திலும் ரப்பர் பேண்ட் உபயோகப்படுத்தி போனி டெய்ல் (Pony-Tail) போடவும். ஒவ்வொரு போனி டெய்லையும் மேல்புறமாக கொண்டு சென்று ஹேர் பின் போடவும். பிறகு, விரல்களை உபயோகித்து அரைவட்ட வடிவில் உள்ள ஹாஃப் பன் (Half Bun) பயன்படுத்தி ரோல் செய்யவும்.
(Ear to Ear Section) என்கிற வகையில், ஒரு காதில் இருந்து மற்றொரு காது வரையிலான தலையின் முன்பகுதி முடியை இரு பாகங்களாக பிரிக்கவும். பின்புற முடி மொத்தத்தையும் அரைவட்ட வடிவில் மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்ளவும். ஒவ்வொரு பாகத்திலும் ரப்பர் பேண்ட் உபயோகப்படுத்தி போனி டெய்ல் (Pony-Tail) போடவும். ஒவ்வொரு போனி டெய்லையும் மேல்புறமாக கொண்டு சென்று ஹேர் பின் போடவும். பிறகு, விரல்களை உபயோகித்து அரைவட்ட வடிவில் உள்ள ஹாஃப் பன் (Half Bun) பயன்படுத்தி ரோல் செய்யவும்.
முன்பகுதியில் உள்ள அனைத்து முடியையும் 'ப்ளோ ட்ரை' (Blow dry)செய்து, வலதுபுறமாக கொண்டு சென்று முன்நெற்றியை மறைத்தவாறு 'பின்' செய்யவும். நிறைவாக, பூக்கள் அல்லது மணிகள் கொண்டு அலங்கரித்தால்... சூப்பரோ சூப்பர்! இது பெண்கள் பெரும்பாலும் விரும்பும் ஹேர்ஸ்டைல்!







No comments:
Post a Comment