Friday, February 10, 2017

மணப்பெண் டிப்ஸ்!


தரமான பியூட்டி பார்லரில், திருமணத்துக்கு இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னரே அழகுப் பராமரிப்புகளை ஆரம்பித்துவிடுங்கள். அதிக ஒல்லி அல்லது பருமனானவர்கள், உணவுப் பரிந்துரைக்கு ஒரு டயட்டீஷியனை கன்சல்ட் செய்யலாம்.
திருமணத்தன்று மேக்கப்புக்கு மட்டும் மூன்று மணி நேரம் ஒதுக்கும் அளவுக்கு நேரத்தை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
திருமணம் நெருங்கும்போதும், திருமண நாள் அன்றும் வழக்கமாகப் பயன்படுத்தும் ஷாம்பு, கண்டிஷனர், ஃபவுண்டேஷன் போன்றவற்றுக்குப் பதிலாக, புதிதாக ஒன்றை முயற்சி செய்யாதீர்கள். அது உங்களுக்கு செட் ஆகவில்லை என்றால், அதன் விளைவைச் சரிசெய்ய அவகாசம் இருக்காது.
முகூர்த்தத்துக்கு மேக்கப் போடு வதற்கு முன் ஐஸ் க்யூப்களை முகம், கழுத்தில் ஒற்றியெடுத்துவிட்டு, பிறகு மேக்கப்பை ஆரம்பிக்கலாம். இதனால் சருமம் சென்சிட்டிவ் ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
திருமண நாளில் நடக்கும் ஹோமம், சடங்குகள் மற்றும் எமோஷனலான நேரங்களில் வெளிப்படும் கண்ணீரானது, மேக்கப்பை கெடுத்துவிடும். எனவே, அன்றைய தினம் வாட்டர் புரூஃப் மஸ்காராவைப் பயன்படுத்துவது நல்லது.
நீண்ட நேரம் தாங்கக்கூடிய லிப்ஸ்டிக்கைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம்.
மேக்கப்பை முகத்துக்கு மட்டு மல்லாது கழுத்து, காது மடல், முதுகு, கை, இடுப்புப் பகுதி போன்ற இடங்களிலும் அப்ளை செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் புகைப்படங் களில் ஸ்கின் டோன் ஒன்றுபோலவே இருக்கும்.
மணமேடையில் ஹைஹீல்ஸ் மற்றும் இறுக்கமான, தளர்வான செருப்புகள் வேண்டாம். சௌகரியமான செருப்பாக அணிந்துகொள்வது அவசியம்.
கையில் பவுடர் பூசப்பட்ட கைக் குட்டை வைத்துக்கொண்டால், நெற்றியில் விபூதி, குங்குமம் சரிசெய்வதற்கும், ஏதாவது கரைகளை உடனடியாகத் துடைப்பதற்கும் பயன்படும்!

No comments:

Post a Comment