பொதுவாக மணமகன், திருமணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு சிட்டிங்கும், ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு சிட்டிங்கும் `ஸ்பா’ சென்றால் போதுமானது.
கோல்ட் ஃபேஷியல்..!
திருமணத்துக்கு கோல்ட் ஃபேஷியல் தான் பரிந்துரைக்கத்தக்கது. அப்போது தான் மேடையில் பிரத்யேக மினுமினுப்புடன் ஜொலிக்கலாம்.
ஹேர் ஸ்பா..!
ஹேர் ஸ்பா... ஹேர் வாஷ், ஹேர் க்ரீம், ஹேர் மசாஜ், ஹேர் ஸ்டீம் என நான்கு நிலைகளில் செய்யப்படும். ஹேர் வாஷிங்குக்குப் பிறகு டிரை ஹேர், ரஃப் ஹேர் என கேசத்தின் தன்மைக்கு ஏற்ப க்ரீம் அப்ளை செய்து, பின் மசாஜ் செய்து, ஐந்து நிமிடங்கள் கழித்து ஸ்டீம் கொடுத்து, அல்லது ஹேர் பாத் கொடுத்த பிறகு சீரம் (serum) தடவி ஹேரை செட் செய்வோம். சீரம் தடவியதால், இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் தலை குளிக்க வேண்டும். என்ன ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துவது என, ஸ்டைலிஸ்டிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளலாம்.
பாடி பேக்கேஜ்..!
உடம்பு முழுக்க மசாஜ் கொடுக்கப் படும் பாடி பேக்கேஜில் ஆயில் மசாஜ், பாடிஸ்டோன் மசாஜ், க்ரீம் மசாஜ் என்று மூன்று வகைகள் உண்டு. விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலம். ஆயில் மசாஜில் எண்ணெய் வைத்து, 20 நிமிடங்கள் உடல் சூடு, சோர்வைப் போக்கி புத்துணர்ச்சி தரும் வகையில் மசாஜ் செய்யப்படும். பாடி ஸ்டோன் மசாஜில், லேசாக சூடுபடுத்திய எண்ணெயால் உடல் வலிகள், குறிப்பாக முதுகுவலி நீங்கும் வகையில் மசாஜ் கொடுக்கப்படும்.
பாடி ஸ்கிரப்..!
பாடி ஸ்கிரப் செய்வதனால், உடலில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகள் நீங்கும். புதிய செல்களின் வளர்ச்சி தூண்டப்படும். ஸ்கிரப்பில் பொமிகிரானட் மற்றும் லேவண்டர் ஃபிளேவர்கள் அதிகம் விரும்பப்படும்.
பாடி ராப் (wrap)..!
உடல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற, பாடி ராப் செய்துகொள்ளலாம். இதில் பல ஃபிளேவர்கள் உண்டு. விரும்பிய ஃபிளேவர் க்ரீம் உடல் முழுவதும் தடவப்பட்ட பின், ஒரு டிரான்ஸ்பரன்ட் ஷீட்டால் மூடி, 20 நிமிடங்களுக்குப் பின் ஸ்டீம் செய்யப்படும். சாக்லேட் உடலை மிருதுவாக்கவல்லது என்பதால், இதில் சாக்லேட் ஃபிளேவர் பெரிதும் விரும்பப்படுகிறது.
பாடி ஷைன்
உடல் முழுக்க பளபளக்க, ஜொலி ஜொலிக்க... பாடி ஷைன் செய்துகொள்ளலாம். இதில் சாக்லேட், பொமிகிரானட், லாவண்டர் என்று மூன்று ஃபிளேவர்கள் உண்டு. பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
பெடிக்யூர்..!
பெடிக்யூர் செய்வதனால் கால்களில் உள்ள இறந்த, தடித்த செல்கள் நீக்கப்படும். மசாஜ் கொடுப்பதனால் ரத்த ஓட்டம் நன்கு தூண்டப்பட்டு புத்துணர்ச்சி கிடைப்பதுடன் புது செல்களின் வளர்ச்சி தூண்டப்படும்.
மெனிக்யூர்..!
மசாஜ் கொடுத்து, கை விரல்களை மிருதுவாக்கி, இறந்த செல்களை நீக்கி, நகங்களை செதுக்கி அழகு கூட்டப்படும்.
மேக்கப்..!
மேக், க்ரைலான் (Mac, Krylon) என்று மேக்கப்பில் இரண்டு வகை உண்டு. மேக் மேக்கப், ஒருநாள் முழுக்க நீடித்து நிற்கும். இயற்கையான அழகைத் தரும் நீட் ஃபினிஷிங்காக இருக்கும். க்ரைலான் மேக்கப் ஐந்து மணி நேரம் வரை தாங்கும். மேக்கப்பில் ஹேர்கட், ஹேர்வாஷ், ஹார்ஸ்டைலிங் அடங்கும். திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஒரு ப்ரீமியம் ஷேவ் மற்றும் ஹேர் கட் செய்துகொள்ள வேண்டும்.
மாப்பிள்ளைகளே... ஸ்பா சலோ!
No comments:
Post a Comment